தமிழ்நாடு

tamil nadu

Vaccination Center: விமான நிலையத்தில் தடுப்பூசி மையம் திறப்பு

By

Published : Jan 13, 2022, 8:00 AM IST

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.

vaccination center  covid vaccine center  corona vaccination camp  vaccination center in chennai airport  vaccination center in chennai  விமான நிலையத்தில் தடுப்பூசி மையம்  சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசி மையம்  கரோனா தடுப்பூசி  கரோனா தடுப்பூசி மையம்
விமான நிலையத்தில் தடுப்பூசி மையம் திறப்பு

சென்னை:நாடு முழுவதும் தற்போது கரோனா மற்றும் ஒமைக்ரான் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கரோனா தடுப்பூசி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு பொது சுகாதார மையம், சென்னை விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் வகையில் தடுப்பூசி மையத்தை அமைத்துள்ளது.

விமான நிலையத்தில் தடுப்பூசி மையம்

இதனை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது விமான நிலைய பொது மேலாளர்கள் எஸ்.எஸ். ராஜு, ராஜ்குமார், பொது சுகாதார துறை துணை இயக்குநர் பரணிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஸ்டாலின் மனு

ABOUT THE AUTHOR

...view details