தமிழ்நாடு

tamil nadu

குடிபோதை தகராறு: ஸ்பேனரால் மண்டையை உடைத்த இருவர் கைது

By

Published : Oct 19, 2020, 7:49 AM IST

சென்னை: பாடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை ஸ்பேனரால் அடித்து கொலை செய்ய முயற்சித்த இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடிபோதை தகராறில் இருவர் கொலை முயற்சி
குடிபோதை தகராறில் இருவர் கொலை முயற்சி

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் வித்யாசேகர் (24). இவர் தச்சு வேலை செய்துவருகிறார். இவரது நண்பர்கள் ஆவடி காமராஜர் நகர், கணபதி கோயில் தெருவைச் சார்ந்த கார்த்திக் (38), பாடி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ் (28).

வித்யாசேகர், தனது நண்பர்கள் கார்த்திக், சதீஷ் ஆகியோருடன் பாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். இதன் பிறகு அவர்கள் மூவரும் பாடி, தெற்கு மாட வீதி வழியாக வரும்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், வித்யாசேகர் தரையில் கிடந்த கல்லை எடுத்து நண்பர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், சதீஷ் இருவரும் சேர்ந்து அருகிலுள்ள ஒர்க் ஷாப்பில் இருந்த ஸ்பேனரை எடுத்து வித்யாசேகரின் உச்சந்தலையில் சரமாரியாக அடித்துள்ளனர். வித்யாசேகர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதன்பின்னர் படுகாயமடைந்த வித்யாசேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் வித்யாசேகருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து கொரட்டூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த கார்த்திக், சதீஷ் இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க... வாலிபரின் ஆள்காட்டி விரலை கடித்து பற்களை உடைத்த ஆசாமிக்கு போலீஸ் வலை!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details