தமிழ்நாடு

tamil nadu

Chennai Metro: சென்னை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் விதிமுறையில் மாற்றம்!

By

Published : Apr 19, 2023, 12:02 PM IST

மெட்ரோ நிலையங்களில் வாகனம் நிறுத்த இன்று முதல் பயண அட்டை கட்டாயம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை:தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை மாநகரில் மக்கள் தொகை அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு அதன் சேவை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட சேவை சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளதால் சென்னை மாநகரை சுற்றியுள்ள பகுதிகளிலும் விரிவுபடுத்த இரண்டாம் கட்ட பணிகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும் பயணிகளை கவர்வதற்கு பல முன்னெடுப்புகளை மெட்ரோ நிர்வாகம் செய்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் நடைபெறும் நிகழ்சிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை கொண்டு வருகின்றது. ஏதேனும் மெட்ரோ ரயில் தொடர்பாக புகார்கள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக சென்னை மெட்ரோ நிலையத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் வேறு பணிகளை மக்கள் மேற்கொள்கின்றனர்.

இதனால் மெட்ரோவில் பயணம் செய்யும் பயணியருக்கு வாகனம் நிறுத்த சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு பதிலளித்த மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த பயண அட்டை கட்டாயம் என அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் பயண அட்டையை பயன்படுத்தி ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% தள்ளுபடி தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சிரமம் இல்லாமலும், மெட்ரோ பயண அட்டை வைத்திருந்தால் 20% தள்ளுபடி சலுகை கொடுப்பதாலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: World Liver Day 2023: கல்லீரல் நலனில் கவனம் தேவை - மருத்துவர் அறிவுரை என்ன?

ABOUT THE AUTHOR

...view details