தமிழ்நாடு

tamil nadu

பீச் ரோட்டில் சீறிப்பாய்ந்த 8 சொகுசு கார்கள்.. நேப்பியர் பாலத்தில் மடக்கி ஃபைன் போட்ட போலீஸ்!

By

Published : Mar 12, 2023, 6:55 PM IST

சென்னை நேப்பியர் பாலம் அருகே அதிவகமாகச் சென்ற 8 சொகுசு கார்களை மடக்கி பிடித்தப் போக்குவரத்து போலீசார் தலா ரூ.2,500 அபராதம் விதித்தனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னையில் வார விடுமுறை நாட்களில் கார் மற்றும் இரு சக்கர வாகன பந்தயங்கள் நடைபெற்று வந்தது. அதன் மூலம் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கார் மற்றும் இருசக்கர வாகன பந்தியத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் தடையை மீறி ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

ஆனாலும், அவ்வப்போது அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் போலீசார் கண்களில் மண்ணை தூவிவிட்டு சிலர் பைக் ரேஸில் ஈடுபடுவதும், அந்த வீடியோக்கள் இணையத்தில் பரவிய பிறகு அவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், இன்று(மார்ச் 12) சிவானந்தா சாலையிலிருந்து நேப்பியர் பாலம் செல்லும் வழியில் லம்போக்கினி, பெராரி உள்ளிட்ட 8 சொகுசு கார்கள் அதிவேகமாக சீறி பாய்ந்து சென்றுள்ளது.

இதனைப் பார்த்த சிலர், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வைக்கும் அதிவேகமாக சொகுசு கார்கள் செல்வதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து போலீசார் நேப்பியர் பாலம் அருகே 8 சொகுசு கார்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் காரில் இருந்தவர்கள் நாங்கள் ரேசில் ஈடுபடவில்லை எனவும் தனியார் நிகழ்ச்சியின் தொடக்க விழாவிற்கு பங்கேற்க கார் எடுத்து வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் போக்குவரத்து போலீசார் அதிவேகமாக காரை இயக்கியதால் கார்களில் உள்ள நம்பர் பிளேட்டில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களுக்காக எட்டு கார்களுக்கும் தலா ரூ.2,500 அபராதம் விதித்தனர். மேலும், இவ்விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் மெரினா கடற்கரைக்கு வந்த சிலர் சொகுசுகளை பார்த்தவுடன் அதன் முன் நின்று செல்பி எடுத்தனர். பின்னர், போக்குவரத்து போலீசார் பொதுமக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: 12 வருடத்திற்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும் சென்னையின் அடையாளம்!

ABOUT THE AUTHOR

...view details