தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

By

Published : Jan 16, 2023, 6:42 AM IST

சென்னையில் காணும் பொங்கல் முன்னிட்டு மெரினாவில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காணும் பொங்கல் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
காணும் பொங்கல் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும், குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது.

உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும் போது வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை முத்துசாமி பாயினட்- வாலாஜா பாயின்ட் - அண்ணாசாலை பெரியார் சிலை - அண்ணாசிலை வெல்லிங்டன் பாயின்ட் - ஸ்பென்சர் சந்திப்பு - பட்டுளாஸ் சாலை - மணிக்கூண்டு G.R.H பாயின்ட் வழியாக டாகடர் ராதாகிருஷ்ணன் சாலை செல்ல வேண்டும்.

அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை - பெல்ஸ் ரோடு - வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை செல்ல வேண்டும். பாரதி சாலையானது கண்ணகி சிலையிலிருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

பெல்ஸ் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் Google வரைபடத்தில் Road Ease app மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இதனால் வாகன ஓட்டிகள் தங்களது Google Map மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் விஜய்க்கு கார் பரிசு!

ABOUT THE AUTHOR

...view details