தமிழ்நாடு

tamil nadu

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM

By

Published : Sep 3, 2021, 9:20 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தை காணலாம்.

top ten news at 9 am  top ten news  top ten  top news  latest news  tamilnadu latest news  tamilnadu news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  9 மணி செய்திச் சுருக்கம்  காலை 9 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

1. பிறப்பு, இறப்பு சான்றிதழ் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பிறப்பு, இறப்பு சான்றிதழ் குறித்து பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க உதவும் வகையில் சென்னை மாநகராட்சி உதவி எண்ணை அறிவித்துள்ளது.

2. அரசு ஊழியர்களாக தங்களை அறிவிக்க வேண்டும்- சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கும் கோரிக்கையை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

3. புனே-சென்னை வந்தடைந்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள்

புனேவில் இருந்து எட்டு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

4. காவல் நிலையங்களில் தேங்கி நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்... மீண்டும் ஒப்படைக்க டிஜிபி உத்தரவு!

காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

5. கல்லூரி திறந்த அன்றே ஊரடங்கு விதிமீறல்... பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு!

கல்லூரி தொடக்க நாளில் ஒன்று கூடி ஊர்வலம் நடத்தியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

6. திருட்டுபோன முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் கார்: போலீஸ் விசாரணை!

திருச்சியில் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரின் காரை திருடிச் சென்றவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

7. கடல் வழியாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபர்கள் கைது!

கடல் மார்க்கமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

8. ஆதார் விவரங்களைக் கொண்டு பி.எப் பணம் திருட்டு: இ-சேவை மைய உரிமையாளர் கைது!

இரண்டு நபர்களின் ஆதார் விவரங்களை மாற்றி பி.எப் பணம் திருடிய இ-சேவை மைய உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

9. குடிபோதையில் பிரபல சூழலியல் செயற்பாட்டாளரை தாக்கிய கும்பல்: போலீஸ் விசாரணை

கர்நாடகா மாநிலத்தில் சூழலியல் செயற்பாட்டாளரான டி.வி.கிரிஷ், போதை கும்பலால் கடுமையாகத் தாக்கப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

10. PARALYMPICS: இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி

பாரா ஒலிம்பிக் தொடர் உயரம் தாண்டுதலில் 18 வயதான இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ABOUT THE AUTHOR

...view details