தமிழ்நாடு

tamil nadu

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM

By

Published : Jun 30, 2021, 6:24 AM IST

Updated : Jun 30, 2021, 7:13 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

top ten news at 7 am  top news  top ten  top ten news  latest news  tamilnadu latest news  tamilnadu news  morning news  news updates  ஈடிவி பாரத்  etvbharat  காலை 7 மணி செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்  செய்திச் சுருக்கம்  7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM

1. தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2. 'பள்ளி பேருந்துகளுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்'

பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

3. உணவுப் பாதுகாப்புத் துறை திடீர் ஆய்வு!

தனியார் உணவு விடுதியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நேற்று (ஜூன் 29) திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

4. பயங்கரவாதிகளை எச்சரிக்கும் காஷ்மீர் ஐஜி!

காஷ்மீரில் பொதுமக்கள், ஓய்வுபெற்ற காவல் அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் பயங்கரவாதிகளுக்கு ஐஜி (காவல் துறை மண்டலத் தலைவர்) விஜயகுமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

5. அதிர்ச்சி வீடியோ: சொகுசு கார் மோதியதில் பம்பரம் போல் சுற்றிய ஆட்டோ!

மதுபோதையில் சொகுசு காரில் வந்த இருவர் ஆட்டோவில் மோதிய விபத்து ஏற்படுத்திய சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6. வெளிநாட்டவர்போல் பெட்ரோல் பங்கில் கொள்ளை!

பெட்ரோல் பங்க் மேலாளரின் கவனத்தை திசை திருப்பி 80 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7. ரயில் சேஸிங்....3.5 டன் அரிசி பறிமுதல்

ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3.5 டன் அரிசியை நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் பறிமுதல்செய்தார்.

8. சத்தமே இல்லாமல் சாதனை படைத்த வலிமை!

ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கூட வெளியாகாமல் ஒரு மில்லியன் விருப்பத்தைப் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையை வலிமை படைத்துள்ளது.

9. ஜான் விக் 4ஆம் பாகம் ஆரம்பம்!

சேட் தகல்ஸ்கி ஒரு ஸ்டண்ட் கலைஞர். அவர் இயக்குநர் அவதாரம் எடுத்த ‘ஜான் விக்’ திரைப்படம் முழுக்க முழுக்க ஸ்டண்ட் காட்சிகளுக்காகவே ரசிக்கப்பட்டது. தற்போது நான்காம் பாகத்தையும் அவரே இயக்குகிறார்.

10. அக்டோபரில் தொடங்குகிறது டி20 உலகக்கோப்பை திருவிழா!

டி20 உலகக்கோப்பை 2021 ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

Last Updated : Jun 30, 2021, 7:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details