தமிழ்நாடு

tamil nadu

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM

By

Published : May 11, 2021, 1:29 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS 1 PM
TOP 10 NEWS 1 PM

1.கடன் பிரச்னை: மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழப்பு!

மதுரை: உசிலம்பட்டி அருகே கடன் பிரச்னை காரணமாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

2.பிணவறை நடைபாதையில் இறந்தவர்களின் உடல்கள் - அதிர்ச்சியில் உறவினர்கள்!

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை பிணவறை நடைபாதையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3.நீதிமன்றங்கள் தலையிடும்வரை அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயல்படுவதில்லை!

ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர்கள் கிடைக்காததால் நமது நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர் என்பது அறியும்போது இதயம் கனக்கிறது. உதவிக்காகப் பலமுறை வேண்டுகோள் விடுத்தபின், பொறுமையை இழந்த மாநில அரசுகள் ஆக்ஸிஜனுக்கான சட்டப் போர்களைத் தொடங்கின. நீதிமன்றங்களால் விசாரிக்கப்படும்வரை அலுவலர்கள் செயல்பட தவறியது ஏற்கத்தக்கதல்ல.

4.கேரளாவின் முதல் வருவாய்த்துறை அமைச்சர் கௌரியம்மா காலமானார்

திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கே.ஆர். கௌரியம்மா இன்று காலமானார். அவருக்கு வயது 102.

5.பெங்களூருவில் கரோனா தீவிரம்: ஒரே நாளில் 300 சடலங்களை எரியூட்டும் அவலம்

பெங்களூரு: கரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ள காரணத்தால், பெங்களூரு தகன மேடைகளில் இடமின்றி, ஆம்புலன்ஸ்கள் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

6.ஆரணி மூதாட்டி கொலை வழக்கு: ஏழு மாதங்களுக்குப் பின் மூவர் கைது!

திருவண்ணாமலை: ஆரணி அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு மாதங்களுக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

7.ஜகார்த்தாவிலிருந்து 2 கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கண்டெய்னர்கள் இந்தியா வருகை!

டெல்லி: இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து 2 கண்டெய்னர்களில் கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கலன்களை எடுத்து வருகிறது.

8.ரயில் மோதி ஒன்றரை வயது புலிக்குட்டி உயிரிழப்பு!

போபால்: சத்புரா புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த புலிக்குட்டி ஒன்று ரயில் மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

9.ரியா மருத்துவமனைக்கு மேலும் ஒரு ஆக்ஸிஜன் டேங்கர் அனுப்பி வைப்பு

அமராவதி: ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததை அடுத்து, திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சென்னையிலிருந்து மேலும் ஒரு ஆக்ஸிஜன் டேங்கர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

10.அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் கரோனாவால் உயிரிழப்பு!

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் டாக்டர் சக்தி நாதன் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details