தமிழ்நாடு

tamil nadu

காலை 7 மணி செய்திச் சுருக்கம்- Top 10 News@7AM

By

Published : May 27, 2021, 7:02 AM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்..

Top 10 News 7AM
Top 10 News 7AM

மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்

சென்னை: மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் டெண்டருக்கு இடைக்காலத் தடை

மதுரை: பொது விநியோகத் திட்டத்திற்காக பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

'கரோனா மூன்றாம் அலை வருவதைத் தடுத்து நிறுத்த முடியாது'

கரோனா தடுப்பூசியைப் பொறுத்தவரை போதுமான அளவு உற்பத்தி இல்லை என்றால், கரோனா மூன்றாம் அலை வருவதைத் தடுத்து நிறுத்த முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் வழக்கு: பயனர்களின் உரிமையைப் பறிக்கின்றனவா புதிய விதிமுறைகள்?

புதிய விதிமுறைகள் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

'பாஜகவின் ஆட்சிப் பொறுப்பு நாள், மக்களுக்கான நாள்' - எல். முருகன்

மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாஜகவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவை, மக்களுக்கு தொண்டாற்றும் தினமாக கொண்டாட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

'கஷ்டத்திலும் காளைகளை காக்கும் காளையன்' - ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கான உத்வேகம்

ஜல்லிக்கட்டு காளைகளையும் நாட்டு மாட்டினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய வசதி வாய்ப்புகளை இழந்த பின்னரும் கூட போராடி வருகிறார் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் வீரபாண்டி.

ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு

ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியரின் வங்கியிலிருந்து ரூ.53 லட்சம் திருட்டு

சென்னை: வில்லிவாக்கத்தில் ஏடிஎம் கார்டை புதுப்பிப்பதாகக் கூறி அரசு ஊழியரின் வங்கியிலிருந்து 53 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'ஜுன் 15 வரை பயணிகள் சிறப்பு ரயில்கள் ரத்து நீட்டிப்பு' - தென்னக ரயில்வே

பயணிகள் வரத்து குறைவால் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்த பல்வேறு சிறப்பு ரயில்கள் மேலும் ஜுன் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

’தில் இருந்தா அரெஸ்ட் பண்ணுங்க’ - சவால் விடும் பாபா ராம்தேவ்!

அரசுக்கு துணிவு இருந்தால் தன்னை கைது செய்யட்டும் என யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details