தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் நாளை மின்தடை.! எங்கெல்லாம் தெரியுமா.?

By

Published : Feb 26, 2023, 5:34 PM IST

சென்னையில் தாம்பரம், கே.கே.நகர், போரூர், கிண்டி ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

tomorrow Power cut in Chennai
சென்னையில் நாளை மின்தடை

சென்னை: இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னையில் நாளை(பிப்.27) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர், போரூர், கிண்டி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்: ராஜகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ஐ.ஓ.பி காலனி, ஔவை நகர், பொன்னியம்மன்கோவில் தெரு, ஏரிக்கரை தெரு பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, மகிமைதாஸ் தெரு, எம்.ஜி.ஆர் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கே.கே.நகர்: ஆழ்வார்திருநகர், காமாட்சி நகர் மெயின் ரோடு, அப்பா தெரு, காமகோடி நகர், வேல்முருகன் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

போரூர்: மங்களா நகர், கணேஷ் அவென்யூ, காவியா கார்டன், செந்தில் நகர், வெங்கடேஸ்வர நகர் 1வது மெயின் ரோடு, மீனாட்சி நகர், தாங்கள் தெரு, மாங்காடு நண்பர்கள் நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, ரஹமத் நகர், அபி எஸ்டேட், குன்றத்தூர் மெயின் ரோடு, நரிவனம் சாலை, அடிசன் நகர் திருமுடிவாக்கம் முருகன் கோயில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பால்வாராயண் குளக்கரை தெரு, வெங்கடாபுரம், 4வது தெரு சிட்கோ திருமுடிவாக்கம், ஐயப்பந்தாங்கல் மேட்டு தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், தக்க்ஷன் அபார்ட்மெண்ட் கோவூர் ஸ்ரீனிவாச நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தில்லை நடராஜா நகர், பாலாஜி நகர், குமரன் ஹார்டுவார்ஸ் மெயின் ரோடு, சுப்புலட்சுமி நகர், ஒண்டி காலனி, பாபு கார்டன் செம்பரம்பாக்கம் பனிமலர் மருத்துவ கல்லூரி, டிரங்க் ரோடு ஒரு பகுதி, வரதராஜபுரம் எஸ்.ஆர்.எம்.சி. சமயபுரம், மூர்த்தி நகர், தர்மராஜா நகர் திருவேற்காடு கன்னபாளையம் ஆயில் சேரி, பிடாரிதங்கள், கோளப்பஞ்சேரி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கிண்டி: ஆதம்பாக்கம் கருணை தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11வது தெரு ஆலந்தூர் தொலைபேசி எக்ஸ்சேஞ்ச், பி.எஸ்.எஸ்.பி பள்ளி, பரங்கிமலை, மவுண்ட் பூந்தமல்லி ரோடு ஒரு பகுதி, ராமர் கோயில் தெரு, டி.ஜி.நகர், பழவந்தாங்கல் ஒரு பகுதி மடிப்பாக்கம், குபேரன் நகர் 1 முதல் 12வது தெரு, மூவரசம்பேட்டை எம்.எம்.டி.சி. காலனி மெயின் ரோடு, ராகவா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை மழைக்கு வாய்ப்பு.?

ABOUT THE AUTHOR

...view details