தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ரத்து - சத்தியபிரதா சாஹூ அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 9:08 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த வாக்காளர் திருத்த பட்டியலுக்கான சிறப்பு முகாம் வருகின்ற டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறும் எனத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

தி.மலையில் நாளை நடக்கவிருந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ரத்து
தி.மலையில் நாளை நடக்கவிருந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ரத்து

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.25) வாக்காளர் திருத்தப் பட்டியிலுக்கான சிறப்பு முகாம்கள் முடிவடைந்த நிலையில், நாளையும் (நவ. 26) முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு அதன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து அன்றைய தினமே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், முதல் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை மற்றும் நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான பணிகள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாமகள் மூலம் நடைபெற்று வந்தன.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இணையதளம் மற்றும் சேவை வாயிலாகவும், நேரில் சென்று தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதியின் நிலவரப்படி நேரில் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் 36 ஆயிரத்து 142 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

குறிப்பாக அதில் பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 15 ஆயிரத்து 187 நபர்களின் விண்ணப்பங்களும், முகவரி மாற்றத்திற்காக 19 ஆயிரத்து 36 நபர்களும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மட்டும் இன்றும் நாளையும் (நவ. 25, 26) நடைபெறவிருந்த சிறப்பு முகாம் வருகின்ற டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிக்கு மாற்றபடுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் வாக்காளர் திருத்த பட்டியல் சிறப்பு முகாம் டிசம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சத்தியபிரதா சாகு தெரிவித்தார்.

அதன்படி சென்னையில் உள்ள வடக்கு, தெற்கு மற்றும் மத்திய தொகுதிகளுக்கு அந்தந்த மாநகராட்சி மண்டல துணை ஆணையர்களும், ஆரணி தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அதிகாரியும், பொள்ளாச்சி தொகுதிக்கு கோவை மாவட்ட வருவாய் அதிகாரியம் மற்ற தொகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:"அடி முடி காணாதவர் அருணாச்சலேஸ்வரர்.. கருணாநிதியும் அருணாச்சலேஸ்வரர் தான்..!" - அமைச்சர் துரைமுருகன்!

ABOUT THE AUTHOR

...view details