தமிழ்நாடு

tamil nadu

TNPSC Exam Date Change: மிக்ஜாம் புயல் எதிரொலி..! டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தேதிகளில் மாற்றம்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 7:35 AM IST

TNPSC Exam postponed: மிக்ஜாம் புயல் காரணமாகக் கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்துள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC Exam Date Change
டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தேதிகளில் மாற்றம்

சென்னை:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத் தேர்வினை கடந்த 22.11.2023 முதல் நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய 2 நாட்கள் (டிச.4 மற்றும் டிச.6) உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு மிக்ஜாம் (MICHAUNG) புயல் காரணமாகத் திங்கட்கிழமையினை (டிச.4) இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதிகளில் மாற்றங்களிலும் செய்யப்பட்டுள்ளது.

அதாவது திங்கள் கிழமை (டிச.4) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் டிசம்பர் 6 தேதி புதன் கிழமைக்கும், புதன் கிழமை (டிச.6) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் வியாழக்கிழமை (டிச.7) அன்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று (திங்கட்கிழமை 04) நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கிழமை (6.12.2023) அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும், புதன் கிழமை (6.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (7.12.2023) அன்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்துகொள்ளுமாறு" கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை! ஆட்சி யாருக்கு?

ABOUT THE AUTHOR

...view details