தமிழ்நாடு

tamil nadu

பொறியியல் கலந்தாய்வில் 4ஆவது சுற்று முடிவில் 93,571 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு!

By

Published : Nov 13, 2022, 5:46 PM IST

Updated : Nov 13, 2022, 7:15 PM IST

பொறியியல் கலந்தாய்வில் 4 சுற்றுகள் முடிவில் 93,571 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. துணை கலந்தாய்விற்கு 60,707 இடங்கள் உள்ளன.

tnea
tnea

சென்னை: தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. 1,58,157 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 446 கல்லூரிகளில், 2 லட்சத்து 7 ஆயிரத்து 996 இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது.

அதில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழுவின் மூலம் சிறப்பு, பொதுப்பிரிவினருக்கான 4 சுற்றுக் கலந்தாய்விற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. அவற்றில் இதுவரை 93 ஆயிரத்து 571 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 610 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 377 பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். முதல் சுற்றில் 10 ஆயிரத்து 17 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 9340 மாணவர்களும், 2ஆவது சுற்றில் 18ஆயிரத்து 520 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்ததில் 17,650 பேரும், 3ஆவது சுற்றில் 24ஆயிரத்து 727 பேரில் 23 ஆயிரத்து 450 பேரும், 4ஆவது சுற்றில் 30 ஆயிரத்து 938 பேருக்கு இடங்களை ஒதுக்கீடு செய்ததில் 26 ஆயிரத்து 409 பேர் என 77,226 பேரும் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டில் 81,390 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 8,759 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 7,797 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டில் 7,206 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

4 சுற்றுகள் முடிவில் இடங்கள் ஒதுக்கீடு விவரம்

துணைக் கலந்தாய்வு கடந்த 9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கலந்தாய்விற்கு இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இந்தக் கலந்தாய்விற்கு 60,707 இடங்கள் உள்ளன.

இதையும் படிங்க: 10% இட ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

Last Updated :Nov 13, 2022, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details