தமிழ்நாடு

tamil nadu

B.E., B.Tech 3-ஆம் சுற்று தற்காலிக இடம் ஒதுக்கீடு.. காலி இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 4:53 PM IST

Engineering admission: பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கான 3 ஆம் சுற்றில் சேருவதற்கு, பொதுப் பிரிவு கலந்தாய்விற்கு தற்காலிகமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

B.E., B.Tech 3-ஆம் சுற்று கலந்தாய்வில் தற்காலிக இடம் ஒதுக்கீடு
B.E., B.Tech 3-ஆம் சுற்று கலந்தாய்வில் தற்காலிக இடம் ஒதுக்கீடு

சென்னை: பொறியியல் படிப்புகளான பிஇ, பிடெக் படிப்பில் 3ஆம் சுற்றில் சேருவதற்கு, பொதுப் பிரிவு கலந்தாய்வில் 60 ஆயிரத்தி 967 மாணவர்களுக்கு தற்காலிகமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ,பிடெக் படிப்பில் சேர, கடந்த மே மாதம் 5ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 4ஆம் தேதி வரையில் விண்ணப்பம் பெற்று, தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்தி 76 ஆயிரத்து 744 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு, இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்தி 19 ஆயிரத்து 346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1 லட்சத்தி 60 ஆயிரத்து 783 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 385 விளையாட்டு வீரர்களுக்கும், 163 மாற்றுதிறனாளிக்கும், 137 முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

முதல் கட்ட பொது கலந்தாய்வின் மூலம் 16 ஆயிரத்து 64 மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு, அவர்களின் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, 2ஆம் சுற்று கலந்தாய்வில் 40 ஆயிரத்து 741 இடங்கள் நிரம்பின. அதனடிப்படையில் தற்போது 3ம் சுற்று பொதுப்பிரிவு கலந்தாய்விற்கு 141.86 முதல் 77.50 மதிப்பெண்கள் வரை பெற்று, தரவரிசைப் பட்டியிலில் 87 ஆயிரத்து 50 முதல் 1 லட்சத்தி 76 ஆயிரத்து 744 வரை பெற்ற 89 ஆயிரத்து 695 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 62 ஆயிரத்து 232 பேர் அவர்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர். அவர்களில் 55 ஆயிரத்து 648 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், 8 ஆயிரத்து 587 முதல் 27 ஆயிரத்து 866 வரை பெற்ற 19 ஆயிரத்து 280 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதில், 12 ஆயிரத்து 19 பேர் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர்.

இதுவரையில் 5 ஆயிரத்து 319 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 26ஆம் தேதிக்குள் மாணவர்கள் அவர்களது விரும்பும் இடத்தை உறுதி செய்ய வேண்டும். கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகள் 27ஆம் தேதி வெளியிடப்படும். அதனைப் பெற்றுக் கொண்டு கல்லூரியில் சேரலாம் அல்லது மேல்நோக்கிய நகர்வில் வேறு கல்லூரியில் சேர்வதற்கும் விருப்பங்களை பதிவு செய்யலாம். தொடர்ந்து செப்டம்பர் 3ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், பொறியியல் படிப்பிற்கான 3 சுற்றுக் கலந்தாய்விற்கான தற்காலிக ஒதுக்கீடு முடிந்துள்ள நிலையில், 42 ஆயிரத்து 326 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவில் உண்டியல் 100 கோடி காணிக்கை செலுத்திய பக்தர் - ஆடிப்போன கோவில் நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details