தமிழ்நாடு

tamil nadu

TNEA Supplementary Counselling: பொறியியல் துணை கலந்தாய்வு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 7:05 PM IST

Engineering Admission: பிஇ, பிடெக் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான துணை கலந்தாய்விற்கு இன்று முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

TNEA Supplementary Counselling: பொறியியல் துனைக்கலந்தாய்வு- விண்ணப்பிக்க கடைசி தேதி?
TNEA Supplementary Counselling: பொறியியல் துனைக்கலந்தாய்வு- விண்ணப்பிக்க கடைசி தேதி?

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் சேர விண்ணப்பம் பெற்று, தரவரிசைப் பட்டியல் 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2,19,346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1,60,783 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

சிறப்பு பிரிவினருக்கான விளையாட்டுப் பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. முதல் கட்ட பொதுக் கலந்தாய்வின் மூலம் 16 ஆயிரத்து 64 மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 2ஆம் சுற்று கலந்தாய்வில் 40 ஆயிரத்து 741 இடங்கள் நிரம்பி உள்ளன.

பொதுப்பிரிவு 3ஆம் சுற்றுக் கலந்தாய்வில் 37 ஆயிரத்து 508 மாணவர்களுக்கு பொதுப்பிரிவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 7,424 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 2,959 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகமாக 1,138 மாணவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதையும் படிங்க:கல்லூரிகளில் சாதிப்பிரிவினை ஊக்கப்படுத்தியதாக 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம் - கல்லூரி கல்வி இயக்ககம் அதிரடி!

இந்த நிலையில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிஇ, பிடெக் படிப்பில் சேருவதற்கு கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பொது, தொழிற்கல்விப் பிரிவில் துணைத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் செய்யாத மாணவர்களும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் ஆன்லைன் துணை கலந்தாய்வு நடத்தப்படும்.
அதன் பின்னர் பட்டியலினம், அருந்ததியர் பிரிவில் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களில் எஸ்சி பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை பொறியியல் சேர்க்கை 2023 (TNEA 2023) என்பது பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:Common Question Paper for Quarterly Exam: காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் அறிமுகம்..பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..

ABOUT THE AUTHOR

...view details