தமிழ்நாடு

tamil nadu

அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் நிதி மோசடி... லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jun 19, 2021, 3:42 PM IST

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சத்திய நாராயணன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tnagar Mla sathya malpractice his welfare fund, notice to dvac, MHC
அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் நிதி மோசடி...லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை:சென்னை ராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்ததாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யநாராயணன் பல மோசடிகள் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, தி.நகர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17ஆம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் செலவு செய்தது, 2018-19ஆம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம்,காசி குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் ரூ. 30 லட்சம் செலவு செய்தது, அதே போல 2017-18ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் சட்டத்திற்கு புறம்பாக 2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொண்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

மேலும், தி. நகர் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ சத்திய நாராயணன், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென பல முறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 27ஆம் தேதி வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'ஓஎன்ஜிசிக்கு அனுமதி அளித்தால் சாகும்வரை போராடுவோம்'

ABOUT THE AUTHOR

...view details