தமிழ்நாடு

tamil nadu

"மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்புவது போல் உள்ளது" - ஈபிஎஸ்-ஐ விளாசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

By

Published : Mar 31, 2023, 9:18 AM IST

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி மீது குற்றம் சாட்டுவது மல்லாந்து படுத்திக்கொண்டு எச்சில் துப்புவதை போல் இருக்கிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:சட்டப்பேரவை வளாகத்தில் வியாழன் அன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "போதைப்பொருட்கள் யார் ஆட்சியில் கூடுதலாக இருந்தது என்பது அவர் அறியாததா? என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் கஞ்சா எங்கேயும் பயிரிடப்படவில்லை எனவும்
எங்கே பயிரிடப்படுகிறது என அவர் தெரிவித்தால் பறிமுதல் செய்ய வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் போதை வஸ்துக்கள் தாராளமாகக் கிடைத்தது. கடைகளில் பான், குட்கா விற்பனையைக் கண்டித்து 11 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் காட்சிப்படுத்தியபோது, உறுப்பினர்கள் பதவியை பறிப்பதில் தான் குறியாக இருந்தார். அவர்கள் கஞ்சா குறித்து பேசுவது விந்தையாக இருக்கிறது.போதைப்பொருள் இல்லாத நிலை உருவாக்க மாணவர்களிடம் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா வருகிறது. தமிழக ஏடிஜிபி தெலுங்கானா மாநிலத்தில் 6,000 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்படுகிறது என்ற தகவலைத் தெரிவித்ததால் 6 ஆயிரம் ஏக்கர் கஞ்சா அழித்தொழிக்கப்பட்டது என கூறிய அவர் 4000 கோடி மதிப்பு கஞ்சா அழிக்கப்பட்டதற்குத் தமிழக காவல்துறை காரணமாக அமைந்தது என தெரிவித்தார்.

போதை வஸ்துக்களிலிருந்து தமிழ்நாடு முழுமையாக மீண்டுள்ளது. குட்கா பான் பொருட்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து வந்ததை அரசு பறிமுதல் செய்திருக்கிறது. கொலை சம்பவங்களைக் கஞ்சா அடித்து கொலை செய்திருப்பதாக எடப்பாடி கூறுகிறார். இவர் ஏதாவது அவர்களுக்குப் போட்டுக் கொடுத்தாரா என்ற கேள்வியை எழுப்ப தோன்றுகிறது என சாடினார்.

கஞ்சாவுக்கும் எடப்பாடிக்கும் என்ன தொடர்பு எனத் தெரிவித்த அவர் அதிமுக ஆட்சியில்தான் காமராஜ் உதவியாளர் வைரவன் மீது கஞ்சா வழக்கு போட்டவர் ஜெயலலிதா. காலை உணவுத்திட்டம் அட்சயபாத்திரம் தொண்டு நிறுவனம் மூலம் செய்யப்பட்டதை அரசே செய்ய முன்வந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இதனை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உண்மையிலேயே சத்துள்ள உணவு தந்தது காமராஜர், எம்ஜிஆர், சர்.பிடி தியாகராயர், ஆகியோர் தான். காலை உணவுத்திட்டம் என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என கூறினார்.

இந்தியாவில் 3500 பேர் கொரோனா தொற்றுக்குப் பாதிப்படைந்துள்ள நிலையில் சென்னையில் 105 ஆக அதிகரித்திருக்கிறது. மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 5 மாநகராட்சிகள்.. அமைச்சர் கே.என்.நேரு கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details