தமிழ்நாடு

tamil nadu

மத்திய அரசுக்கு காவடி தூக்கும் மாநில அரசு - டி.ஆர். பாலு கடும் தாக்கு

By

Published : Oct 3, 2020, 8:09 AM IST

சென்னை: மாநில அரசு அதிகாரங்களை மத்திய அரசுக்கு விட்டுகொடுத்து தினமும் காவடி தூக்குகிறது என்று திமுக எம்பி டி.ஆர். பாலு கடுமையாக விமர்சித்தார்.

t.r balu
t.r balu

சென்னை ஆவடியை அடுத்த அய்யப்பாக்கம் ஊராட்சியில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, ஊராட்சி தலைவரும், வில்லிவாக்கம் ஒன்றிய திமுக செயலாளருமான துரை வீரமணி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் திமுக எம்பியும், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர் பாலு கலந்துகொண்டு பேசுகையில், "மோடி அரசால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களது நலனை காக்க வேண்டியது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடமையாகும். அதனால்தான் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாக வழக்கு தொடுத்திருக்கிறோம்.

விவசாயிகளுக்கு விழிப்புணர்வைு ஏற்படுத்தும் வகையில் விவசாய சட்டத்தை எதிர்த்து, இந்தக் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5லட்சத்து 68ஆயிரம் பேருக்கு விவசாய கடன் கொடுத்ததாக எழுதி வைத்திருக்கிறார்கள். இதில், 5லட்சத்து 32ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 40ஆயிரம் பேர்தான் கடன் பெற தகுதியானவர்கள்.

மாநில அரசு, தனது அதிகாரங்களை மத்திய அரசுக்கு விட்டு கொடுத்து தினமும் காவடி தூக்குகிறது. அதிமுக, ஒரு கட்சி அல்ல, அங்கு ஒரு காட்சி நடக்கிறது" என்றார்.

இதையும் படிங்க:மாணவர்களுக்கு பாடங்களில் எழும் சந்தேகங்கள் - நிவர்த்தி செய்ய மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்!

ABOUT THE AUTHOR

...view details