தமிழ்நாடு

tamil nadu

2.72 கோடி மதிப்பீட்டிலான கட்டடங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர்

By

Published : Dec 7, 2020, 5:04 PM IST

2 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் மாநில வரி அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

TN Chief Minister inaugurated buildings worth Rs 2.72 crore
TN Chief Minister inaugurated buildings worth Rs 2.72 crore

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (டிச.07), தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் வடசென்னை பதிவு மாவட்டம் - கும்மிடிப்பூண்டி மற்றும் செங்குன்றம் ஆகிய இடங்களில் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி வணிகவரி கோட்டம், மணப்பாறையில் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில வரி அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பதிவுத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 14 பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 13 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் ஒரு நபருக்கு அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். அதற்கு அடையாளமாக, இன்று ஏழு வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், வணிகவரி ஆணையர் முதன்மைச் செயலாளர் சித்திக், பதிவுத்துறைத் தலைவர் முனைவர் பொ. சங்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details