தமிழ்நாடு

tamil nadu

பிரபல ரவுடி பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை: நடந்தது என்ன?

By

Published : Dec 14, 2022, 10:28 PM IST

கொரட்டூரில் பட்டப்பகலில் 3 பேர் சேர்ந்து பிரபல ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரவுடி பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை
பிரபல ரவுடி பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை

பிரபல ரவுடி பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை: நடந்தது என்ன?

சென்னை: பலகொலை வழக்குகளில் தொடர்புடைய சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்கிற கருக்கா சுரேஷ். இவர் மீது MKB நகர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, மாதவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 3 கொலை வழக்கு உட்பட 30-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

முன் விரோதம் காரணமாக பாடி வன்னியர் தெருவில் வைத்து மர்ம நபர்களால் சுரேஷ் என்கிற கருக்கா சுரேஷ் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யபட்டுள்ளார். அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றக்கூடிய மனைவி கமலாவை பார்க்க பாடி பகுதிக்கு வரும்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல் சரமாரியாக சுரேஷை ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொரட்டூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல் துறையினர் கருக்கா சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். நடந்த கொலை தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைத்து அந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பலை கொரட்டூர் போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல் செங்குன்றம் காவல் துணை ஆணையர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி: குரூப்-1சி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ABOUT THE AUTHOR

...view details