தமிழ்நாடு

tamil nadu

குரூப் 1 முதல் நிலைத்தேர்வு: 3 லட்சம் பேர் நாளை எழுதுகின்றனர்

By

Published : Nov 18, 2022, 10:29 PM IST

தமிழ்நாட்டில் குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் நாளை தேர்வு எழுதுகின்றனர்.

குரூப் 1 முதல் நிலைத்தேர்வு
குரூப் 1 முதல் நிலைத்தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் குரூப் 1 நிலையில் துணை ஆட்சியர் 18, காவல் துணை கண்காணிப்பாளர் 26, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 13, வணிகவரி உதவி ஆணையர் 25, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 3 என காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதனைத்தாெடர்ந்து 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை நாளை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையில் எழுத உள்ளனர்.

200 மதிப்பெண்களுக்கு விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் தேர்வு நடைபெறுகிறது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வினாத்தாள் குளறுபடி: சென்னை பல்கலை.யில் நடைபெற இருந்த தமிழ் தேர்வுகள் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details