தமிழ்நாடு

tamil nadu

பேனா நினைவுச் சின்னம்; மக்கள் கருத்துக்கு ஏற்ப முதலமைச்சர் முடிவு செய்வார்: திருமாவளவன்

By

Published : Feb 6, 2023, 8:41 PM IST

பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து மக்கள் கருத்துக்கு ஏற்ப முதலமைச்சர் முடிவு செய்வார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

பேனா நினைவு சின்னம்
பேனா நினைவு சின்னம்

பேனா நினைவுச் சின்னம்; மக்கள் கருத்துக்கு ஏற்ப முதலமைச்சர் முடிவு செய்வார்: திருமாவளவன்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இளங்கோவன் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணிக் கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக இந்த வார இறுதியில் பிரசாரம் செய்ய உள்ளேன்.

மேலும், மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்ற கருத்து வலுவாக பேசப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

கலைஞருக்கு நினைவுச் சின்னம் வைக்க வேண்டும். அது சிறப்பாகவும் அமைய வேண்டும். எனவே, பொது மக்கள் அனைவரும் வரவேற்கத்தக்க வகையிலும் அது இருக்க வேண்டும். முதலமைச்சர் மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப முடிவு எடுப்பார் என நம்புகிறேன். பிப்ரவரி 13-ம் தேதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும்’’ என்றார்.

பின்னர், பணப் பட்டுவாடா குறித்த கேள்விக்கு, ’’அமைச்சர் தேர்தல் பணிக்கான செலவு பற்றி சொல்லி இருப்பார். வெளிப்படையாக பேசுகின்றார்கள் என்றால் தேர்தல் களப்பணியாற்ற கூடியவர்களுக்கு செலவை தலைமைக் கழகம் கவனித்துக்கொள்ளும் என்ற வகையில் பேசி இருப்பார். தேர்தலில் மக்களை சந்திப்பதே ஜனநாயகம் தான். திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பாஜக நிர்வாகிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் பின்னணியில் உள்ள சம்பந்தப்பட்ட யாரையும் விடாமல் அனைவரையும் கைது செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஆர்டிஇ கட்டணத்தை தராவிட்டால் 27ம் தேதி போராட்டம்: தனியார் பள்ளி இயக்குநரகம் முடிவு

ABOUT THE AUTHOR

...view details