தமிழ்நாடு

tamil nadu

‘நெல்லை சாதிவெறியாட்டம்’- வழக்கை விரைந்து விசாரிக்க திருமாவளவன் வலியுறுத்தல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 2:25 PM IST

திருநெல்வேலியில் பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்து சித்திரவதை செய்த சம்பவத்திற்கு வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘நெல்லை சாதிவெறியாட்டம்’- வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட திருமாவளவன் வலியுறுத்தல்!
‘நெல்லை சாதிவெறியாட்டம்’- வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை:நெல்லை மாவட்டம் மணிமுத்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் மனோஜ்குமார் (21). இவரது உறவினர் சேகர் மகன் மாரியப்பன்(19) இருவரும் கடந்த 30ம் தேதி இரவு இருவரும் மணிமூர்த்தீஸ்வரத்தில் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சிலர் இருவரையும் வழிமறித்து, கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களின் சாதி பெயரை செல்லியும் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவர்களிடமிருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக படுகாயமடைந்த இரண்டு பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், " நெல்லை மாவட்டம் மணிமுத்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் இருவர் சாதிவெறிக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியுள்ளனர். இந்த அநாகரிகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதையும் படிங்க:பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரி சோதனை!

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். சாதிவெறி கொண்ட அந்தச் சமூகவிரோதக் கும்பல் இரவு ஏழு மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரையில் அவ்விளைஞர்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

அத்துடன், அவர்களிடமிருந்து அலைபேசிகள், இருசக்கர வண்டி மற்றும் பணமெடுக்கும் ஏடிஎம் அட்டை போன்றவற்றைப் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆடையில்லாமலேயே அவர்கள் அங்கிருந்து தப்பித்து வீடுவந்து சேர்ந்துள்ளனர். அதன்பின்னரே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

அதனையடுத்து காவல்துறையினர் சாதிவெறிக் கும்பலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர். அதேவேளையில், குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது" என்றார்.

இதையும் படிங்க:காவல் நிலையம் சென்ற ரவுடி உயிரிழப்பு! விசாரணைக்காக வந்த போது வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு என போலீசார் தகவல்! உறவினர்கள் வாக்குவாதம்!

ABOUT THE AUTHOR

...view details