தமிழ்நாடு

tamil nadu

மியான்மரில் சிக்கித் தவித்த 13 பேர் இந்தியா வருகை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

By

Published : Oct 5, 2022, 6:42 AM IST

மியான்மரில் சிக்கித் தவித்த 13 பேர் தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் சிக்கித் தவித்த 13 பேர் இந்தியா வருகை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மியான்மரில் சிக்கித் தவித்த 13 பேர் இந்தியா வருகை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னை: மியான்மரில் மோசடி கும்பலின் பிடியில் சிக்கிய 13 பேரை மீட்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்தது. இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக மீட்குமாறு கடிதம் எழுதியிருந்தார். அந்த வகையில் 13 பேர் மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் இருந்து தாய்லாந்திற்கு தகவல் தொழில் நுட்ப பணிக்காக அழைத்துச் சென்று சட்டவிரோதமான பணிகள் செய்யச் சொல்லியதால், அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

அதனடிப்படையில் மியான்மரில் இருந்து 13 பேர் மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டனர். தாய்லாந்தில் இருந்து சென்னை வரை தமிழ்நாடு அரசின் சார்பில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டது. தற்போது டெல்லி வந்துள்ளனர். டெல்லியில் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்படுவதால், சென்னை வர காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

சோதனைகள் முடிந்ததும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவர். 13 பேரின் ஆவணங்கள் சோதனை செய்யப்படுகிறது. அடுத்த விமானத்தில் சென்னை வந்து குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பப்டுவார்கள்” என கூறினார்.

இதையும் படிங்க:மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்... மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details