தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் வீடு அருகே திருட்டு.. பட்டப்பகலில் கொள்ளையர்கள் கைவரிசை!

By

Published : Dec 5, 2022, 4:26 PM IST

அமைச்சர் வீட்டின் அருகே பட்டப்பகலில் மத்திய அரசு ஊழியரின் வீட்டில் திருட்டு நடந்து இருப்பது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு
திருட்டு

சென்னை: ஆவடி காமராஜர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ். மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆவடியில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இருவரும் ஷாப்பிங் செய்ய வண்ணாரப்பேட்டைக்கு சென்றுள்ளனர். வீடு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சியாக வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 15 சவரன் தங்க நகை காணாமல் போன தெரியவந்தது.

வீடு காலியாக இருந்ததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் பூட்டை உடைத்து 15 சவரன் நகையைத் திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களைக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டு சம்பவம் நடந்த அதே பகுதியில் தான் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரின் வீடும் உள்ளது. ஒரு அமைச்சர் குடியிருக்கும் பகுதியிலே அதுவும் பட்டப்பகலில் கள்வர்கள் கைவரிசை காட்டிச் சென்று இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாட்டில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு

ABOUT THE AUTHOR

...view details