தமிழ்நாடு

tamil nadu

இரும்பு திருடிய இளைஞரை தாக்கி கொலை செய்த கட்டட பணியாளர்கள்

By

Published : Dec 20, 2022, 10:16 AM IST

சென்னையில் இரும்பு திருடிய இளைஞரை பணியாளர்கள் கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரும்பு திருடிய வாலிபரைத் தாக்கி கொலை செய்த கட்டட பணியாளர்கள்..!
இரும்பு திருடிய வாலிபரைத் தாக்கி கொலை செய்த கட்டட பணியாளர்கள்..!

சென்னை:சைதாப்பேட்டை தாடர்ந்தர் நகர் மைதானம் அருகே சத்தியமூர்த்தி& கோ என்னும் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டட பணிக்காக வாங்கி வைத்திருக்கக்கூடிய இரும்பு கம்பிகள், பலகைகள் அடிக்கடி காணாமல் போவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு (டிசம்பர் 19) இந்தக் கட்டடத்தில் புகுந்த ஒரு பெண் உட்பட 3 பேர் கட்டட பணிக்காக வைத்திருந்த இரும்புப் பலகையை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்வதை கட்டட பணியாளர்கள் சிலர் பார்த்துள்ளனர்.

உடனே அந்த இருசக்கர வாகனத்தை ஊழியர்கள் மடக்கி இருவரையும் பிடித்துள்ளனர். இதையடுத்து பிடிப்பட்ட இரண்டு இளைஞர்களை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கி விசாரிக்கையில், அவர்கள் சைதாப்பேட்டை வெங்கடாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சாகின்ஷா காதர்(21) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதில் சாகீன்ஷா காதர் என்ற சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் உடனடியாக சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு மயக்கமடைந்த சாகின்ஷாவை அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த போது மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சைதாப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாகின்ஷா உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறையினர் கொலை வழக்குபதிவு செய்து, இந்த வழக்கு தொடர்புடைய கட்டடத்தின் பொறியாளர் உமா மகேஷ்வரன், ஜெயராம், நம்பிராஜ், பாலசுப்பிரமணியன், சக்திவேல், மனோஜ், அஜித், பணியாளர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட 8 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நகராட்சிக்குட்பட்ட கடைகளில் கொள்ளை முயற்சி.. இளைஞர் கைது.

ABOUT THE AUTHOR

...view details