தமிழ்நாடு

tamil nadu

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது!

By

Published : May 12, 2021, 2:58 PM IST

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது!
கரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது!

சென்னை:சென்னையில் அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றன. கரோனா தொற்று பரவும் பகுதியில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.


இருப்பினும், சென்னையில் கரோனா வால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துள்ளது. இதுவரையிலும் 4 லட்சத்து 4 ஆயிரத்து 733 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 லட்சத்து 61 ஆயிரத்து 652 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 37 ஆயிரத்து 713 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட 5,368 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், மண்டல வாரியான பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளன.

அண்ணா நகர் - 43080
கோடம்பாக்கம் - 40960
தேனாம்பேட்டை - 39116
ராயபுரம் - 31308
அடையாறு - 33011
திரு.வி.க. நகர் - 32003
தண்டையார்பேட்டை - 27156
அம்பத்தூர் - 31769
வளசரவாக்கம் - 26307
ஆலந்தூர் - 18318
பெருங்குடி - 18027
திருவொற்றியூர் - 10961
மாதவரம் - 14440
சோழிங்கநல்லூர் - 11529
மணலி - 5445

இதையும் படிங்க: முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details