தமிழ்நாடு

tamil nadu

6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

By

Published : Oct 18, 2022, 10:52 PM IST

6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை
6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

சென்னையை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் என்பவர், கடந்த 2020 செப்டம்பர் 19 ஆம் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவியை, தனது வீட்டுக்கு கொண்டு சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் துறைமுகம் அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டனுக்கு எதிராக போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: போலீஸ் என கூறி கட்டிட ஒப்பந்ததாரரிடம் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்கள்

ABOUT THE AUTHOR

...view details