தமிழ்நாடு

tamil nadu

சிறுமியை கடத்தியவர்கள் கைது

By

Published : Jul 20, 2021, 1:54 AM IST

சென்னை: பெற்றோருக்கு தெரியாமல் 12 வயது சிறுமியை கடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஃப்ட்க்ச்

சென்னை நொளம்பூர் யூனியன் சாலையில் வசித்துவருபவர் புவனேஸ்வரி(35). இவரது 12 வயது மகள் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி வெளியில் விளையாடிக்கொண்டிருந்த மகள் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் புவனேஷ்வரி பல இடங்களில் தேடியுள்ளார்.

பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் புவனேஷ்வரியின் மைத்துனர் உதயனுடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கௌசல்யா(25) என்ற பெண் அவரின் சொந்த ஊரான மதுரைக்கு தன்னுடன் அழைத்துச் சென்றது தெரியவந்தது. தனது மகளை தனக்கு தகவல் அளிக்காமல் அழைத்துச் சென்ற கௌசல்யா மீது போலீசாரிடம் புவனேஷ்வரி புகார் அளித்து தனது மகளை மீட்டுத் தரக்கோரி புகாரில் கோரிக்கை விடுத்தார்.

புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் புவனேஷ்வரியின் மைத்துனரான உதயன் மற்றும் கௌசல்யாவின் சித்தி தேவி ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உதயனின் மனைவி 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் கௌசல்யாவை திருமணம் செய்துகொள்ளாமல் உதயன் ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. மேலும், கௌசல்யாவை 12 வயது சிறுமியுடன் அவரின் சித்தியான தேவிதான் பேருந்தில் ஏற்றி விட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கௌசல்யா 12 வயது சிறுமியுடன் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த கௌசல்யாவை மடக்கி அவரை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டனர்.

இதனையடுத்து நொளம்பூர் போலீசார் திருச்சிக்கு விரைந்து இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு 12 வயது சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் கடத்திச் சென்ற கௌசல்யா மட்டுமின்றி அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்ட கௌசல்யாவின் சித்தி தேவியையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details