தமிழ்நாடு

tamil nadu

பரிசோதனை களப்பணியாளர்களை குறைத்தது சென்னை மாநகராட்சி

By

Published : Sep 20, 2021, 4:53 PM IST

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தும், குறைந்தும் வரும் நிலையில் 12000ஆக இருந்த பரிசோதனை களப்பணியாளர்களின் எண்ணிக்கையை 1400ஆக குறைத்துள்ளது சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் தற்காலிக பணியாளர்களை, தற்போது 1400ஆக குறைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னையில் கரோனா தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முக்கியமாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிய மாநகர் முழுவதும் 12,000 தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்‌.

இந்த நிலையில் கரோனா தொற்று ஜூலை மாதத்தில் கணிசமாக குறைந்த நிலையில் 12 ஆயிரமாக இருந்த ஊழியர்களை 5 ஆயிரத்து 527ஆக குறைத்து, ஐசிஎம்ஆர்-ன் வழிகாட்டுதலின்படி தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தோம் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் தற்போது கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், 5527 ஆக இருந்த பணியாளர்களை 1400ஆக மாநகராட்சி குறைத்துள்ளது. குறிப்பாக இந்த பணியாளர்களை கரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட செய்லகளுக்கு பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 126 பணியாளர்களும் , கோடம்பாக்கம் மண்டலத்தில் 112 பணியாளர்களும் என 1386 பணியாளர்கள் கரோனா சம்பந்தமாக பணியாற்றுவார்கள். மீதமுள்ள 14 நபர்கள் சிறப்பு பணியாளர்களாக தலைமைச் செயலகத்திலும் கோயம்பேடு பகுதிகளிலும் பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க:தொழிற்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details