தமிழ்நாடு

tamil nadu

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமியா ஈஸ்வரி? ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை - புது ரூட்டில் திரும்பும் வழக்கு!

By

Published : Mar 24, 2023, 11:21 AM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் பணிப்பெண் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவர் திருடப்பட்ட நகைகளை வாங்கியதாக தேனாம்ப்பேட்டை போலீசார் கைது செய்து உள்ளனர். வினால்க் சங்கர் நவாலியிடம் இருந்து 340 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடயே கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் 9 லட்ச ரூபாய் பணத்தை ஈஸ்வரி கொடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் அடிப்படையில் வெங்கடேசனிடம் பணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து பெயரில் வங்கி கணக்கில் அடகு வைத்துள்ள 350 கிராம் தங்க நகைகளை மீட்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

அதேநேரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவும் அங்கமுத்துக்கு தெரியாது எனக் கூறப்படுகிறது. சோழிங்நல்லூர் பகுதியில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது பெயரில் பினாமியாக வாங்கியதாக ஈஸ்வரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் எவ்வளவு நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் நேரில் விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருடப்பட்ட நகைகள், வாங்கிய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்து உள்ளனர்.

நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளதால், ஐஸ்வர்யாவின் வீட்டுக்குச் சென்றோ அவரை வரவழைத்தோ விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

வீட்டுக்கு செல்லும் போது லாக்கரில் உள்ள நகைகள் பற்றி கேட்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். திருட்டு தொடர்பாக போலீசில் புகார் அளித்த போது சௌந்தர்யா திருமணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும் ஐஸ்வர்யா வழங்கி உள்ளார். அந்த ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்த்து திருடப்பட்ட நகைகளை போலீசார் சரி பார்த்து வருகிறார்கள். நீதிமன்றத்தில் ஒப்படைக்க திருடப்பட்ட நகைகளின் ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அப்போ எனக்கும் பசிக்கும்ல! - குஜராத்தி உணவுகளை ஒரு பிடிபிடித்த ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details