தமிழ்நாடு

tamil nadu

1,895 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிக நியமனம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

By

Published : Dec 15, 2022, 2:22 PM IST

கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

1,895 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிக நியமனம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
1,895 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிக நியமனம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

சென்னை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிச.15) நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அரசு கலை கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் 192 பேருக்கு பணி மாறுதல் நியமன ஆணைகளை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 4,000 பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. இது தவிர மீதமுள்ள 1,895 காலி பணியிடங்கள் மாணவர்களின் நலன் கருதி கௌரவ விரிவுரையாளர்களாக தற்காலிகமாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்த நிலையில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விருப்பமுள்ள தகுதியானவர்கள் WWW.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மண்டல வாரியாக பரிசீலிக்கப்படும்.

இதன் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உயர்கல்வியில் எந்த படிப்பில் சேர மாணவர்களுக்கு ஆர்வம்? பள்ளில்வித்துறை கணக்கெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details