தமிழ்நாடு

tamil nadu

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம்!

By

Published : Dec 25, 2019, 5:16 PM IST

சென்னை: நாகை, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

tamilnadu-meterological-department-report-about-rain
tamilnadu-meterological-department-report-about-rain

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ''தென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழ்நாடு, புதுச்சேரிக் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் லேசான மழையும், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்'' என்றார்.

மேலும் ''சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 14 செ.மீ., காரைக்காலில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதனால் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தொடரும் மழை... திணறும் இலங்கை!

Intro:நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழையும் பெய்யும் - புவியரசன்Body:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி :

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 14 செமீ, காரைக்காலில் 13 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்கள் எச்சரிக்கை ஏதும் இல்லை.Conclusion:Use file photo

ABOUT THE AUTHOR

...view details