தமிழ்நாடு

tamil nadu

15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அப்டேட்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 6:21 PM IST

Tamil Nadu weather Update: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

கனமழை
கனமழை

சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதே போல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழைப்பதிவு விபரம்: திருப்பூர், 11 செ.மீ., மழைப்பதிவு ஆகியுள்ளது. திருவாடானை (ராமநாதபுரம்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 9 செ.மீ மழைப்பதிவு ஆகியுள்ளது, சேலம் 8 செ.மீ., மழைப்பதிவு ஆகியுள்ளது. திருப்பூர் PWD, சோழவந்தான் (மதுரை), குன்னூர் (நீலகிரி) தலா 7 செ.மீ மழைப்பதிவு ஆகியுள்ளது.

கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 6 செ.மீ., மழைப்பதிவு ஆகியுள்ளது. திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம், தாலுக்கா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), வெள்ளக்கோயில் (திருப்பூர்), வாடிப்பட்டி (மதுரை) தலா 5 செ.மீ மழைப்பதிவு ஆகியுள்ளது.

கிருஷ்ணகிரி, பர்லியார் (நீலகிரி), தாராபுரம் (திருப்பூர்), வைகை அணை (தேனி), வீரபாண்டி (தேனி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), மூலனூர் (திருப்பூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 4 செ.மீ மழைப்பதிவு ஆகியுள்ளது என்று சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவித்துள்ளது.

மீன்வர்களுக்கான எச்சரிக்கை: லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: உப்பு அதிகம் உட்கொண்டால் ஆயுட்காலம் குறையுமா? சொல்லவே இல்ல.!

ABOUT THE AUTHOR

...view details