தமிழ்நாடு

tamil nadu

பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணபிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 1:48 PM IST

2 ஆயிரத்து 222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இதற்கான விண்ணப்பம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu-employment-teachers-recruitment-board-announced-vacancy
2222 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள்:யாரெல்லாம் விண்ணபிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?

சென்னை: ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதி தகுதி பெற்றவர்கள் ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வினை எழுதுவதற்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதில் பள்ளிக் கல்வித்துறையில் 2 ஆயிரத்து 171 பட்டதாரி ஆசிரியர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு 23 பட்டதாரி ஆசிரியர்களும், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 16 பட்டதாரி ஆசிரியர்களும் மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு 12 பட்டதாரி, ஆசிரியர்கள் என 2 ஆயிரத்து 222 பணியிடங்கள் போட்டித் தேர்வு மதிப்பெண் மூலம் நிரப்பப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடத்திற்கு பொது பிரிவினர் 53 வயது வரையும், இட ஒதுக்கீட்டு பிரிவினர் 58 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இளங்கலை பட்டப்படிப்புடன் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணியிடத்திற்கான போட்டி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி தகுதி தேர்வு:தமிழ் மொழி தகுதி தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற வேண்டும். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்www.trb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என்றும் விண்ணப்பதாரர்கள், விண்ணபிக்கும் போது இமெயில் ஐடி மற்றும் செல்போன் என் ஆகியவை தற்போது பயன்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

தேர்வு கட்டணம்:பொது பிரிவினர் 600 ரூபாயும், எஸ்சி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் 300 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழ் தேர்ச்சி கட்டாயம்:தேர்வு முறைகள் கட்டாய தமிழ் தேர்ச்சி பெற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் தமிழ் மொழியில் 50 மதிப்பெண்களுக்கு 30 கேள்விகள் கேட்கப்படும். அதில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் இந்த தேர்வு பகுதி ஒன்றில் 30 நிமிடம் நடைபெறும்.

பகுதி 2 ல் முக்கிய பாடங்களுக்கான தேர்வு 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடைபெறும். இந்த தேர்வில் பொதுப் பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45 மதிப்பெண்களும் தகுதி மாதிப்பெண்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை: இளங்கலை பட்டப் படிப்பு அளவில் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் கட்டாயம் தேர்வில் தகுதி பெற வேண்டும். எழுத்து தேர்வு மதிப்பெண்களில் தகுதி பெற வேண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் அதன் அடிப்படையில் தேர்வுகள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி... அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details