தமிழ்நாடு

tamil nadu

புதிதாக 1,630 பேருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Sep 28, 2021, 9:13 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 1,630 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா  கரோனா செய்திகள்  தமிழ்நாடு கரோனா  கரோனா நிலவரம்  கரோனா பாதிப்புகள்  கரோனா தொற்று  corona  corona update  tamilnadu corona update  tamilnadu corona  corona count
கரோனா

சென்னை:தமிழ்நாட்டில் மேலும் புதியதாக 1,50,177 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 1,630 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 66 லட்சத்து 88 ஆயிரத்து 837 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 26 லட்சத்து 60 ஆயிரத்து 553 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 231 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் ஆயிரத்து 643 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 07 ஆயிரத்து 796 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 12 நோயாளிகளும் என 17 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 526 என உயர்ந்துள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்

இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

அதாவது சென்னை மாவட்டத்தில் 117 நோயாளிகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 183 நோயாளிகளும், ஈரோடு மாவட்டத்தில் 121 நோயாளிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 117 நோயாளிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 நோயாளிகளும் புதியதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி

ABOUT THE AUTHOR

...view details