தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் புதிதாக 1,639 பேருக்கு கரோனா!

By

Published : Sep 11, 2021, 9:54 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 1639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

புதிதாக  1639 பேருக்கு கரோனா
புதிதாக 1639 பேருக்கு கரோனா

சென்னை:தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 117 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,639 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நான்கு கோடியே 31 லட்சத்து 66 ஆயிரத்து 828 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 32 ஆயிரத்து 231 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 399 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,517 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 80 ஆயிரத்து 686 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் ஆறு நோயாளியும், அரசு மருத்துமனையில் 21 நோயாளிகளும் என 19 நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 146 உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 170 நபர்களுக்கும், கோவையில் 224 நபர்களுக்கும் அதிக அளவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தலைவியில் உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details