தமிழ்நாடு

tamil nadu

coronavirus in tamil nadu: தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவல்

By

Published : Dec 29, 2021, 10:46 PM IST

coronavirus in tamil nadu: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு மேலும் ஒன்று அதிகரித்து 46 என பதிவாகியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி பாதிப்பு 739 என அதிகரித்துள்ளது. சென்னையில் புதிதாக 294 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல்
கரோனா தொற்று பரவல்

coronavirus in tamil nadu: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (டிச. 29) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 692 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் மேலும் 728 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த 5 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஐந்து நபர்களுக்கும், பீகாரில் இருந்து வந்த ஒருவருக்கும் என 739 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 62 லட்சத்து 95 ஆயிரத்து 167 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் 27 லட்சத்து 46 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. அவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 6 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 614 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 2 ஆயிரத்து 558 என உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகளும் என 8 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 758 என உயர்ந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த 21,401 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

207 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அறிகுறியான எஸ் ஜுன் டிராப் 129 பேருக்கு கண்டறியப்பட்டது. இவர்களில் 46 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் சிகிச்சை பெற்று குணமடைந்த 27 பேர் வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மற்றும் கேரளாவை சேர்ந்த தலா ஒரு நபரும் இதில் அடங்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று நபர்களுக்கும் சென்னை மாவட்டத்தில் 33 நபர்களுக்கும் மதுரை மாவட்டத்தில் 4 நபர்களுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நபர்களுக்கும் கன்னியாகுமரி, சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களும் என 47 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Omicron awareness: தந்தையுடன் 6 வயது மகன் நகர் முழுவதும் ஓடி அசத்தல்

ABOUT THE AUTHOR

...view details