தமிழ்நாடு

tamil nadu

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஜெயில்களில் நவீன கேமரா.. சென்னையில் இருந்தே கண்காணிக்கும் வசதி!

By

Published : Mar 29, 2023, 8:11 AM IST

Updated : Mar 29, 2023, 12:16 PM IST

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிப்பதற்காக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி துவக்கி வைத்தார்.

DGP Amaresh Pujari
அமரேஷ் பூஜாரி

சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

சென்னை: தமிழ்நாடு சிறைத் துறையின் டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி பதவியேற்றதிலிருந்து பல்வேறு நவீன தொழில் நுட்பத்தைச் சிறைத் துறையில் அமல்படுத்தி வருகிறார். தற்போது வெளிநாட்டில் உள்ளது போல கைதிகளைத் தொடர்பு கொள்ள இன்டர்காம் வசதி, சிறைக் காவலர்கள் உடலில் அணிந்திருக்கும் கேமராக்கள், சிறை கைதிகளுக்கான ஆதார் அட்டை பெறுதல் என பல்வேறு திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்தியச் சிறைகள் மற்றும் சிறப்பு பெண்கள் சிறைகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காகக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி துவக்கி வைத்துள்ளார்.

அதை 49 இன்ச் அளவு கொண்ட மிகப்பெரிய சுவர் திரையில் அனைத்து மத்திய சிறைகளிலிருந்து வரும் சிசிடிவி காட்சிகளை நேரடியாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மையத்தில் இரண்டு அதிகாரிகள் 3 ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் சிறை கைதிகள் நடவடிக்கையை கண்காணிக்கவும், சிறை ஊழியர்கள் பணி செய்வதை கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் சிறை ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட உடலில் அணிந்து கொள்ளும் கேமராக்கள் மூலம் வரும் காட்சிகளையும் நேரடியாக இந்த நவீன திரையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது சிறைகளில் அசம்பாவித சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது உயர் அதிகாரிகள் நேரடியாக சம்பந்தப்பட்ட சிலைகளிலிருந்து வரும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கட்டளை இடுவதற்கும் இது பயன்படும் என தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மற்றும் பல்வேறு நவீன மென்பொருட்களைப் பயன்படுத்தி இந்த சுவர் திரை செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் சைபர் க்ரைம்.. பெண்கள் உஷார்.. டிஜிபி கூறிய அறிவுரை என்ன?

Last Updated : Mar 29, 2023, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details