தமிழ்நாடு

tamil nadu

ரவுடிகளுக்கு ஆப்பு: "டிராக் கேடி" செயலி தமிழ்நாடு காவல்துறை அறிமுகம்...!

By

Published : Nov 26, 2022, 8:09 AM IST

தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் சரித்திர பதிவேடு ரவுடிகளின் விவரங்கள் அடங்கிய டிராக் கேடி என்ற புதிய செயலியை டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டார்.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

சென்னை:தமிழக காவல்துறையின் சரித்திர பதிவேடு பட்டியலில் உள்ள குற்றவாளிகளைக் கண்காணிக்க டிராக் கேடி (KD) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகளை மாதந்தோறும் ஆய்வு நடத்தி நேரடி கண்காணிப்பு செய்யும் விதமாக, ரவுடிகளின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கி தமிழக காவல்துறை டிராக் கேடி (KD) என்ற செயலியை உருவாக்கி உள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் தாமரை கண்ணன் மேற்பார்வையில், சென்னை காவல்துறை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான காவல் குழுவினர் ரவுடிகளின் குற்றப்பதிவு தொடர்பான செயல்பாடுகளைக் கண்காணிக்க டிராக் கேடி (KD) செயலியை உருவாக்கினர். இந்த செயலியை நேற்று தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, காவல்துறை தலைமையகத்தில் வைத்து அறிமுகப்படுத்தினார்.

இந்த டிராக் கேடி (KD) செயலியின் அறிமுகம் தொடர்பாகத் தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், டிராக் KD செயலி மூலம் குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிக்கை விபரங்கள், ரவுடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் உள்ளனர், பிணைப் பத்திரங்களின் காலாவதி தொடர்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வகைப்படுத்தி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் அதிகாரிகள் குற்றவாளிகளின் பல்வேறு விபரங்களை விரல் நுணியில் வைத்திருக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செயலியில் 39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திர பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகளை கண்காணிப்பதற்கும், பழிவாங்கும் வகையில் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்கும் இது உதவும் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பிபா உலகக் கோப்பை: போட்டியை நடத்தும் கத்தார் முதல் அணியாக வெளியேறியது...

ABOUT THE AUTHOR

...view details