தமிழ்நாடு

tamil nadu

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: புலிகள் காப்பகங்களுக்கு கள இயக்குனர்கள் நியமனம்!

By

Published : Nov 28, 2022, 8:27 PM IST

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியால் சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை ஆகிய 2 புலிகள் காப்பகங்களுக்கு கள இயக்குனர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: புலிகள் காப்பக கள இயக்குநர்கள் நியமனம்
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: புலிகள் காப்பக கள இயக்குநர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் காப்பகங்களில் சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை ஆகிய 2 புலிகள் காப்பகத்தில் கள இயக்குனர்களின் பதவிகள் காலியாக உள்ளன எனவும் இதனை நிரப்பக்கோரியும், ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக இன்று (நவ.28) வனத்துறை இரண்டு பதவிகளுக்கும் கள இயக்குனர்களை நியமித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், தற்போது சென்னையில் வனத்துறையில் வனப்பாதுகாவலராக இருந்த கே.ராஜ்குமார் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கள இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கோயம்பத்தூரில் வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு வனப்பயிற்சி நிறுவனத்தில் துணை இயக்குனராக பணி புரிந்த ஆர்.பத்மாவதி தற்போது காலியாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் கள இயக்குனராக நியமிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலியாக இருந்த கள இயக்குனர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயக்கம், கூறுகையில், "வனத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து புலிகள் காப்பகங்களுக்கு கள இயக்குனர்களை நியமித்த தமிழ்நாடு அரசுக்கு குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இதன் மூலம் தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.தொடர்ந்து தமிழ்நாடு அரசு மற்றும் வனத்துறை காடுகளையும், வன உயிரினங்களையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திடீரென பற்றி எரிந்த இ-பைக்: பதைபதைக்கும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details