தமிழ்நாடு

tamil nadu

100 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்கு இயங்க அனுமதி? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

By

Published : Feb 11, 2022, 8:59 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து வரும் 14ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குல் இயங்க அனுமதி
100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குல் இயங்க அனுமதி

சென்னை:தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின்ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மழலையர் பள்ளிகள் திறப்பு, 100 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

இதையும் படிங்க:'ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன் அலுவலர்கள் சட்டப்படி நோட்டீஸ்கள் அனுப்புவதில்லை'

ABOUT THE AUTHOR

...view details