தமிழ்நாடு

tamil nadu

Thalaivar 171 : ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கும் லோகேஷ்! உலக நாயகனை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 12:14 PM IST

Updated : Sep 11, 2023, 12:29 PM IST

Rajnikanth 171 will direct lokesh kanagaraj : நடிகர் ரஜினிகாந்தின் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர்171’.. சன் பிக்சர்ஸ் அதிகார அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர்171’.. சன் பிக்சர்ஸ் அதிகார அறிவிப்பு

சென்னை:நடிகர் ரஜினிகாந்தின் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இது குறித்து சன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தாயாரிப்பில் ரஜினியின் 170வது படமான ஜெயிலர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.

ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு காசோலை மற்றும் கார்களை பரிசாக வழங்கினார். அதனைத்தொடர்ந்து, படத்தில் பணிபுரிந்த 300 பேருக்கு ஜெயிலர் பெயர் பதிக்கப்பட்ட தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவலை எக்ஸ் தளத்தில், "தலைவர் 171" என பட நிறுவனம் பதிவிட்டுள்ளது. #Thalaivar171 என்ற ஹேஷ்டெகுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:சாலையோரம் நின்ற வேன் மீது மினி லாரி மோதி கோர விபத்து - 7 பெண்கள் பலி!

Last Updated : Sep 11, 2023, 12:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details