தமிழ்நாடு

tamil nadu

20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Mar 23, 2022, 1:04 PM IST

வரும் நிதியாண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 23) கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. வரும் நிதியாண்டில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற்று 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மக்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு பரிசீலிக்கும்" என்றார்.

இதையும் படிங்க:பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்தக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details