தமிழ்நாடு

tamil nadu

10ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட் எப்போது பதிவிறக்கம் செய்யலாம்?

By

Published : Sep 12, 2020, 5:18 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட் எப்போது பதிவிறக்கம் செய்யலாம்?
10ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட் எப்போது பதிவிறக்கம் செய்யலாம்?

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வரும் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2020 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) மற்றும் மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களும், வரும் 15ஆம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று SSLC SEP 2020 EXAMINATION – HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை “Click”செய்ய வேண்டும். அப்போது தோன்றும் பக்கத்தில், மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மற்றும் செப்டம்பர் 2020 துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண்/நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து தேர்வுக் கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், விண்ணப்ப எண்ணை தவறவிட்டவர்கள் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித்தேர்வராக விண்ணப்பித்து அறிவியல்பாட செய்முறைத் தேர்வுக்கு வருகைபுரியாதோர் மற்றும் அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 15க்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் ஆகியோர் நடைபெறவுள்ள செப்டம்பர் 2020 துணைத்தேர்வின் போது அறிவியல் பாட செய்முறைத் தேர்வில்பங்கேற்க வேண்டும்.

அறிவியல் பாடத்தில் கருத்தியல், செய்முறை என எதாவது ஒரு பகுதியில் தேர்ச்சி பெறவில்லையெனில், தேர்ச்சி பெறாத பகுதியில் மட்டும் தேர்வர்கள் தேர்வெழுதலாம் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செய்முறைத் தேர்வெழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்குத் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே வரும் 17,18 ஆகிய இரு நாள்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

எனவே, இத்தேர்வர்கள் உரிய தேர்வு மைய தலைமையாசிரியரை மேற்படி நாள்களில் அவசியம் அணுகுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது - முதலமைச்சர் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details