தமிழ்நாடு

tamil nadu

Engineering Counselling: பொறியியல் சேர்க்கை; விளையாட்டு பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்!

By

Published : Jun 5, 2023, 1:47 PM IST

இளநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியுள்ளது.

sports
விளையாட்டு

விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

சென்னை:இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். மேலும், இவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களை ஜூன் 9ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

இந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றித சரிபார்ப்பு பணி இன்று(ஜூன் 5) தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் சேர்க்கை மையத்தில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் கலந்து கொண்ட போட்டிகளின் சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையில் விளையாட்டுப்பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 500 இடங்களுக்கான சேர்க்கை நடத்தப்படும்.

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறும்போது, "பொறியியல் படிப்பிற்கு மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை பெறப்பட்டன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு 18, 670 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எஸ்எம்எஸ் மூலம் இடம், நேரம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மாணவர்களை நேரில் அழைத்துள்ளோம். உதவி மையத்தின் மூலம் தொடர்பு கொண்டும் அவர்களை சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நேரில் அழைத்துள்ளோம். பொதுப் பிரிவு கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்ற வருகின்றன. மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தது போல் வரும் 26ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.

மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்ட பின்னர், நான்கு சுற்றுகளாக நடைபெறும் கலந்தாய்வில், ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்களின் எந்த தரவரிசை எண்ணில் இருந்து எந்த தரவரிசை எண் வரையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர் என்ற பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்ய இரண்டு நாட்களும், அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு வழங்க ஒரு நாளும், அதனை உறுதி செய்ய ஒரு நாளும் வழங்கப்படும்.

மாணவர்கள் ஆறாவது நாள் முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேரலாம் அல்லது மாணவர்கள் தற்போது ஒதுக்கப்பட்ட கல்லூரி அல்லது பாடப்பிரிவினை ஏற்றுக் கொள்வதாகவும், மேல் நோக்கி நகர்வில் தங்களுக்கு வேறு கல்லூரி கிடைத்தால் சேரும் விரும்புகிறோம் என கூறுபவர்கள் அதற்குரிய பதிவினை செய்யலாம். கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டணத்தை நேரடியாக கல்லூரியில் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். மேல்நோக்கி நகர்வில் கல்லூரியை எதிர்பார்க்கும் மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் உதவி மையங்களில் தங்களுக்குரிய கட்டணத்தை செலுத்தி இடத்தை உறுதி செய்யலாம்.

கடந்தாண்டு கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் ஐந்து நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விடுவதால், நடப்பாண்டில் ஐந்து நாட்களாக அது குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மேலும் விபரங்களை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

விளையாட்டுப்பிரிவு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வந்த மாணவர்கள் கூறும்போது, "சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் வெளியிட்ட பின்னர் தாங்கள் எந்த கலந்தாய்வில் எந்த பாடப்பிரிவை எடுப்பது என முடிவு செய்வோம்" என்றனர்.

இதையும் படிங்க: Anna University: பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் அதிகரிப்பு.. கடந்த ஆண்டை விட 17,126 பேர் கூடுதலாக விண்ணப்பம்!

ABOUT THE AUTHOR

...view details