தமிழ்நாடு

tamil nadu

'தென்னகத்து போஸ்' முத்துராமலிங்கத் தேவர் - ஸ்டாலின் புகழாரம்

By

Published : Oct 30, 2022, 11:24 AM IST

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தென்னகத்து போஸ் முத்துராமலிங்கத் தேவர் என்று தெரிவித்துள்ளார்.

'தென்னகத்து போஸ்' முத்துராமலிங்கத் தேவர் - ஸ்டாலின் புகழாரம்
'தென்னகத்து போஸ்' முத்துராமலிங்கத் தேவர் - ஸ்டாலின் புகழாரம்

சென்னை:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை இன்று (அக் 30) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர். ‘தென்னகத்து போஸ்’ ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா

ABOUT THE AUTHOR

...view details