தமிழ்நாடு

tamil nadu

அண்ணனை கொலை செய்த ரவுடி: பழிதீர்த்த தம்பி உள்ளிட்ட 6 பேர் கைது!

By

Published : Jul 6, 2021, 7:57 AM IST

சென்னையில் அண்ணனை கொலை செய்த ரவுடியின் மாமனாரை வெட்டி படுகொலை செய்து பழி தீர்த்துக்கொண்ட தம்பி உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அண்ணனை கொலை செய்த ரவுடி
அண்ணனை கொலை செய்த ரவுடி

சென்னை: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 7ஆவது அவென்யூ 82ஆவது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் வேலு (41). மதுவிற்கு அடிமையான வேலு தினந்தோறும் இரவு உறங்குவதற்கு முன்பு மது குடிப்பது வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் ஜூலை 04ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டின் வெளியே உறங்கியுள்ளார்.

இந்நிலையில், அதிகாலை சுமார் 3 மணியளவில் 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அவரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செம்மஞ்சேரி காவல் துறையினர், வேலுவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை கும்பல் கைது:

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு இருசக்கர வாகனங்களில் ஆறு இளைஞர்கள் சென்றது பதிவாகியிருந்தது.

இதையடுத்து, அவர்கள் செல்லும் வழிகளிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து, அவர்களது வாகனங்களின் எண்கள், செல்போன் சிக்னல் ஆகியவற்றை ட்ரேஸ் செய்தனர். பின்னர், சென்னையில் கொலை செய்துவிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லை பகுதியில் தலைமறைவாக பதுங்கியிருந்த ஆறு பேரையும் தனிப்படை காவல் துறையினர், சுற்றிவளைத்தனர்.

கொலை செய்ய திட்டம்:

பின்னர், அவர்களிடம் விசாரணையில் சேட்டு (எ) பாலஜி (23), மோட்டோ (எ) தினேஷ் (18), சார்லஸ் (19), சஞ்சய் என்பது தெரியவந்தது. அவர்கள் கொலை முயற்சி, கஞ்சா, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவகளில் ஈடுபட்டு, பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

மேலும் சிறையில் உள்ள சுரேஷ்-ன் நெருங்கிய நண்பரான ஸ்டீபன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஜூன் 16ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் கருப்பா (எ) வடிவழகன் என்பவரை வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் சுரேஷுக்கு முக்கிய பங்கு இருப்பதால் அவருடைய குடும்பத்தினரை யாரையாவது ஒருத்தரை கொலை செய்து பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என வடிவழகனின் தம்பி சேட்டு (எ) பாலாஜி திட்டம் தீட்டியுள்ளார்.

பழிக்குப் பழி:

இதனால், சுரேஷ்-ன் மாமனாரான வேலுவை கொலை செய்ய முடிவு செய்த பாலாஜி, தனது நண்பர்களுடன் சென்று வேலுவை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி மாதம் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில் (307ipc) சிறை சென்ற பாலாஜி, வெளியே வந்ததும் அண்ணணின் கொலைக்கு பழிதீர்க்கவே இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.

சேட்டு (எ) பாலாஜி என்பவர் கடந்த வருடம் திருப்பூர் மாவட்டத்தில் தொழிலதிபரை கொலை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி என்பதும், செம்மஞ்சேரி காவல் நிலைய ஜிப்சி வாகனத்தின் கண்ணாடியை வெட்டி தூள் தூளாக்கிய வழக்கும், சென்னை சேப்பாக்கத்தில் காவல் துறையினரைத் தாக்கிய வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரூரில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை..!

ABOUT THE AUTHOR

...view details