தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் உரையில் இடம்பெற்ற ஸ்டாலினின் கனவுத் திட்டம்!

By

Published : Jun 21, 2021, 1:14 PM IST

திமுக ஆட்சியில் இருந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி 2011ஆம் ஆண்டு வரையில் சிங்காரச் சென்னை திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததை அடுத்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

மு க ஸ்டாலின்
மு க ஸ்டாலின்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் 16ஆவது பேரவையின் முதல் கூட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (ஜூன்.21) தொடங்கி வைத்து உரையாற்றினார். அதில் ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு 2002ஆம் ஆண்டு வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராகப் பொறுப்பு வகித்தார். அப்போது சென்னை மாநகராட்சியை பொலிவுபடுத்தும் வகையில், சிங்காரச் சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சிங்காரச் சென்னை திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திமுக ஆட்சியில் இருந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி 2011ஆம் ஆண்டு வரையில் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததை அடுத்து சிங்காரச் சென்னை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், தனது கனவுத் திட்டத்தை மீண்டும் ’சிங்காரச்சென்னை 2.0’ எனும் பெயரில் செயல்படுத்த உள்ளார். இதற்காக பல்வேறு திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆளுநரின் இந்த அறிவிப்பு சென்னையின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாள்வீச்சு வீராங்கனை நன்றி!

ABOUT THE AUTHOR

...view details