தமிழ்நாடு

tamil nadu

தமிழனா..? திராவிடனா..?; யுவன் சின்னபிள்ளை என்பதால் குழம்பிப்போயுள்ளார் - சீமான்

By

Published : Apr 19, 2022, 7:04 PM IST

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இணையத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து , 'கருப்பு திராவிடன், பெருமை மிகு தமிழன்' எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்தப் பதிவு சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது. இதனையடுத்து இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழனா..? திராவிடனா..? ; யுவன் சின்ன பிள்ளை என்பதால் குழம்பி போயுள்ளார் - சீமான்
தமிழனா..? திராவிடனா..? ; யுவன் சின்ன பிள்ளை என்பதால் குழம்பி போயுள்ளார் - சீமான்

சென்னை:அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அண்ட் மோடி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் விவாதப்பொருளாக மாறியுள்ளன.

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இது ஒருபுறம் இருக்க இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜா, கருப்பு உடை அணிந்த தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, ‛கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால், இளையராஜாவின் கருத்திற்கு எதிர்கருத்தை அவரது மகனே வெளிப்படுத்தியுள்ளதாக ஒரு சிலர் தெரிவித்து வந்தனர்.

எருமை மாடுகூட தான் கருப்பாக இருக்கிறது: இந்நிலையில், கருப்பு, திராவிடர் என்ற கருத்துகள் திடீரென பேசுபொருளாக மாறின. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் வந்துள்ளன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இது இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து. தம்பி யுவன், திராவிடனாக இருக்க வேண்டும். இல்லையெனில் தமிழனாக இருக்க வேண்டும். யுவன் சின்ன பிள்ளை என்பதால் குழம்பிப்போயுள்ளார். கருப்பாக இருப்பதால் தான் திராவிடன் என அண்ணாமலை கூறுகிறார். எருமை மாடு கூடதான் கருப்பாக இருக்கிறது. அதற்காக அதை திராவிடன் எனக் கூற முடியுமா? “ என நக்கலாக கலாய்த்தார்.

தமிழனா..? திராவிடனா..?; யுவன் சின்னபிள்ளை என்பதால் குழம்பிப்போயுள்ளார் - சீமான்

இதையும் படிங்க: கருப்பு திராவிடன் - யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி பதிவு

ABOUT THE AUTHOR

...view details